Saturday, May 06, 2006

தேர்தல் 2006 - பிரச்சாரமும் வாக்குறுதிகளும்

1. தமிழ்நாட்டின் 2 பெரிய கட்சிகளும், இலவச கலர்டிவி / கணினி, 2 ரூபாய் / இலவச அரிசி, திருமணத்திற்கு 15000 ரூபாய் / 4 கிராம் தங்கம், விவசாயிகளுக்கு கடன் ரத்து, பல தரப்பினருக்கும் சலுகைகள், வேலை வாய்ப்பு, இலவசமாக விளைநிலம் ... என்று வரைமுறை இன்றி வாக்குறுதிகளை அள்ளி விட்டு, இன்னும் சில வருடங்களில் தமிழகத்தில் தேனும் பாலும் ஓடும் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சில கேள்விகள் எழுகின்றன.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வந்தால், மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள் தானே :) "இலவசத்திலேயே" வாழ்க்கையை ஒட்டி விடலாமே ???

ஆட்சிக்கு வரும் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அக்கட்சியின் மேல் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிவகை செய்வது அவசியமில்லையா ? ஏதாவது வகையில் தண்டனை அவசியமாகிறது இல்லையா ?

வாக்கு கொடுத்து விட்டு, நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா ?

உச்சநீதி மன்றமும், தேர்தல் ஆணையமும், பாராளுமன்றமும் இதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க முன் வரவில்லை ? இது குறித்து ஆலோசனை செய்வது அவர்கள் கடமை இல்லையா ?

மொத்த பட்ஜெட்டையே தேர்தல் வாக்குறுதிகளாக்கி விடுவது அபத்தமில்லையா ?

இன்னும் எவ்வளவு நாட்கள் மக்களை இளிச்சவாயர்கள் என்று அரசியல்வாதிகள் நினைப்பார்கள் ?

பொதுவாக, மக்கள், கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளை வைத்துத் தான் வாக்களிக்கிறார்களா ?


பதில் கூறுங்கள், நண்பர்களே !

2. மீடியா (அதாவது, சொந்தமாக டிவி, தினசரி) பலம் இல்லாத மற்ற கட்சிகள், தமிழகத்தின் 2 பெரிய கட்சிகள் செய்யும் பிரச்சாரத்திற்கு நடுவே காணாமல் போய் விடுகிறார்கள். அதனால் அவை, இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. அதனாலோ என்னவோ, தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது !!! தேர்தல் ஆணையம், டிவி வழி பிரச்சாரத்திற்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஜனநாயகத்தில், எல்லா கட்சிகளின் பிரச்சாரமும் மக்களை சரியாக சென்றடைவது அவசியமாகிறது இல்லையா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

ஒரு கதையில் படித்தேன். எலெக்ஷன் நேரத்தில் ஒரு தொகுதியில் ரோட் போட்டுக் கொண்டிருப்பார்கள். எலெக்ஷன் முடிந்ததும் அம்போ என்று பாதி வேலையில் விட்டுவிட்டு போயிருப்பார்கள்.

மக்கள் ஏதோ செய்து அதே தொகுதியில் இடைக்கால தேர்தல் நடத்த வழிசெய்வார்கள். ரோடு ரோலர்கள் திரும்ப தொகுதிக்கு வரும்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

Dondu Sir,

கருத்துக்கு என் நன்றி !

மாயவரத்தான் said...

ரெண்டு கட்சி இருந்து ஆடுற ஆட்டமே தாங்க முடியலை. இதிலே மூணாவது ஒரு 'பெரிய' கட்சி வேற வந்திச்சின்னா தமிழ்நாடு தாங்காதுங்க வாத்யாரே

Pot"tea" kadai said...

பாலா,
நன்று!
//ஆட்சிக்கு வரும் கட்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், அக்கட்சியின் மேல் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிவகை செய்வது அவசியமில்லையா ? ஏதாவது வகையில் தண்டனை அவசியமாகிறது இல்லையா ?

வாக்கு கொடுத்து விட்டு, நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையில்லையா ?

உச்சநீதி மன்றமும், தேர்தல் ஆணையமும், பாராளுமன்றமும் இதற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க முன் வரவில்லை ? இது குறித்து ஆலோசனை செய்வது அவர்கள் கடமை இல்லையா ?//

இது தொடர்பாக எனக்கும் பல கேள்விகள் எழுந்ததுண்டு.இது தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தேர்தல் ஆணையம் "election -manifesto" வில் இருக்கும் வாக்குறுதியைத் தவிர புதிதாக ஏதும் அறிவிக்க கூடாது என்பதில் ஆரம்பித்து, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கும் கட்சிகள் தடை செய்யப் படும் என்பட்து வரையான கடும் கட்டுப்பாடுகளை இயற்றினாலொழிய இது நிறுத்தப்பட இயலாது.அல்லது கட்சிகளின் "election - manifesto"வை சாசனப்பத்திரமாக பதிவு செய்யும் பட்சத்தில் எந்தவொரு குடிமகனும் பிற்காலத்தில் வழக்கு போட ஏதுவாக இருக்கும்.

enRenRum-anbudan.BALA said...

மாயவரத்தான்,
:)) தேங்க்ஸ் வாத்தியாரே !

Pot"tea" kadai,
தங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன் ! நன்றி !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails